புதன், 25 மார்ச், 2009

ஒரு தாயின் குரல்..

கொலையுண்டு போனஎன் புதல்வர்களின்முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்திதன் கோரப்பசியாற்றிதாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்இன்னுமா "தாய் நிலம்"புதல்வர்களைக் கேட்கிறது?போராட என்னை அழைக்காதேநானொரு தாய்எனது புதல்வர்களையும் கேட்காதேஇரக்கமற்ற 'தாய்நிலமே'கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்இன்னமும் காயவில்லை.கடித்துக் குதறிநெரித்தும் எரித்தும்வடக்கிலும் தெற்கிலும்உலகெங்கிலுமாகஎத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.இன்னும் அடங்காதோ உன் பசி?விண்ணேறி மண் தொட்டுமீண்ட பின்னும்சமாதானம் வேண்டயுத்தம் தேவையோ?பற்றி எரிக ஆயுத கலாசாரம்!என் மழலைகளை விடுநாளைய உலகம்அவர்களுக்காய் மலரட்டும்!
(ஈழக்கவிஞர் ஒளவை)
மகன் புறமுதுகிட்டான் போர்க்களத்தில் என்று கேட்டு அவன் பாலுண்ட தன் முலையை அறுத்து எறிந்த புறநானூற்று தாயின் வீரத்தைச் சொல்லி சொல்லி ஆணுலகம் போர்ப் பரணி எழுதி வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் மூளைச்சலவையிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இன்றைய போர்முனையில் இலங்கையிலிருந்து ஒலிக்கிறது ஒரு தாயின் குரல்...........

தீஸ்தா செடவால் - பத்திரிகையாளர்

சாதியத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒருபோதும் நாம் மதவாதம் குறித்துப் பேச முடியாது. நாட்டின் வேறு எந்தப் பகுதியை விடவும் திராவிடப் பண்பாட்டின் இதயமாக இருக்கும் தமிழகத்திற்கு இந்த அடிப்படை நன்றாகத் தெரியும். எவ்வாறு சாதியத்தின் மூலம் தன் சொந்த மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, மிகக் கடினமாக வேலைகளை அவர்கள் மீது திணித்ததோடு மட்டுமின்றி, அதை இழிவாகவும் சித்தரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்து மதத்தின் கொடூர முகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதியமும் மதவாதமும்; சாதியத்துக்கு எதிரான வன்முறையும், மதவாதத்துக்கு எதிரான வன்முறையும் ஒன்றுதான். அதனால் மதவாதத்தை எதிர்க்கின்றவர்களும், சாதி வெறுப்புக்கு எதிரான சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.நாடாளுமன்றத்தைப் போல் அல்லாமல் நமது பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, 33 சதவிகித இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்ததோடு, தலித் பெண்கள், முஸ்லிம் பெண்கள், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கிராம அளவிலான அரசியலில் பங்கேற்க அனுமதித்திருக்கிறது. ஆனால் என்ன மாதிரியான மதச்சார்பற்ற ஜனநாயக சமூகம் நம்முடையது? மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலித் பெண்மணி, சனவரி 26 அன்று தேசியக் கொடியை ஏற்ற முற்படும் சொந்த கிராமத்திலேயே நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் என எங்கும் இதே நிலைதான். தன் தேசம், நாட்டுப்பற்று, தேசியம் என்றெல்லாம் சொந்தம் கொண்டாட ஒரு தலித் பெண்ணுக்கு உரிமையில்லை. அதனால் அறுபதாண்டுகளை கடந்துவிட்ட சுதந்திர இந்தியாவில் - இன்று உண்மையான, உயிர்த் துடிப்புள்ள ஜனநாயகத்துக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

வெள்ளி, 20 மார்ச், 2009

பகத் சிங் 78நினைவு நாள்




மனிதனை மனிதன் சுரண்டுவதை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்குமான விடுதலையை கொண்டுவரக்குடிய மாபெரும் புரட்சியின் பழி பீடத்தில் , தனி நபர்களின் உயிர் தியாகங்களை தவிர்க்க முடியாது .


- பகத் சிங் -


புரட்சி வெல்க !!