பொருளுற்பத்தி சாதனங்கள் மாறும்போது, பொருளாதார சக்திகள் தாக்கத்துக்கு உள்ளாகின்றன. அப்பொழுது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் ஏற்படும் முரண்பாடுகள் வர்க்கப்போராட்டத்தில் வந்து முடிகின்றன. இதில் பாட்டாளி வர்க்கம் வெற்றி பெறறாலொழிய மக்கள் அனைவருக்கும் சமத்துவ வாழும் உரிமை கிடைக்க முடியாது. உண்ண உணவும், உடுக்க உடையும், தங்க இடமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பொருளாதார ´சமத்துவ யுகம்´ உதயமாவதற்கு எவ்வளவோ காலம் ஆகலாம். அதுவரை சமூதாயத்தில் பெரும்பான்மையினரான பாட்டாளி மக்கள் அரசைக் கைப்பற்றி சுரண்டும் வர்க்கத்தை பூண்டோடு அழித்து சர்வாதிகாரம் நடத்தியாக வேண்டும்!" இதுவே டிக்டேட்டர்ஷிப் ஆஃப் தி ப்ராலிடேரியட் (Dictatorship of the Proletariat) அதிரடியான வார்த்தைகள். ஆழ்ந்த சிந்தனையில் சமூகத்தின் மீது சார்பற்ற கண்ணோட்டம். "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" உலக பாட்டாளி மக்களை ஒன்றிணைக்க முதன்முதலாக ஒருகுரல் ஆளும் வர்க்கத்தினரின் தலையில் பேரிடியாய் விழுந்தது. மாற்று சிந்தனையால் ஆளும் வர்க்கத்தினரை ஆட்டங்காண வைத்தவர் கார்ல் மார்க்ஸ். பாட்டாளி மக்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக தம்முடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக