புதன், 26 நவம்பர், 2008

மனிதன் அயோக்கியன் ஆவது ஏன்?

மனித சமூதாயத்தினிடம் ஒழுக்கம் நாணயம் குறைந்து விட்டது. பலாத்கார உணர்ச்சியும் கெடுதல் புத்தியும் வளர்ந்து விட்டது. இதற்கு நமது மதம் ஜாதி என்பனவாகிய இரண்டும் தான் காரணம். கடவுளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் கடவுள் என்றால் என்ன என்பது உலகில் யாருக்குமே தெரியாது. அது வெறும் வேஷம் தான். மதம் சாதி என்பது யாவருக்குமே தெரியும். மதம் என்பது மற்ற மதக்காரனிடம் துவேஷம் வெறுப்பு இழிவுப்படும் தன்மை என்பனவாகும். எந்தவிதமான கூடாத கேடான காரியத்தைச் செய்தாவது மதத்தைக் காப்பாற்றலாம் காப்பாற்ற வேண்டும். அது போலவே தானும் வாழ வேண்டும் என்பதாகும். ஜாதியும் அது போன்றதே.இந்துமதம் - பார்ப்பன ஜாதி என்பவை எந்தவிதமான அதர்மத்தைச் செய்தாவது தர்மத்தைக் காப்பாற்று என்பதோடு பிராமணன் தன்னைக் காப்பாற்று என்பதோடு பிராமணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பதாகும். அது போல கிருஸ்துவர், மகமது (இஸ்லாம்) மதங்கள் மனிதன் என்ன பாவத்தைச் செய்தாலும் சடங்கு பிராத்தனை தொழுகை மூலம் பாவ மன்னிப்புப் பெறலாம் என்பது. இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்ட மக்களிடம் ஒழுக்கம் நாணயம் யோக்கியம் முதலியவைகளை எதிர்பார்க்க முடியுமா? எந்த மனிதனாவது ஒழுக்கம் நாணயம் நேர்மை யோக்கியம் ஆகியவைகள் உடையனாக இருக்க முடியுமா? பாவத்திற்கு (கேடு செய்ததற்கு) பிராத்தனையால் வேண்டுதலால் மன்னிப்பு கிடைக்கும் என்று கடவுளை மதத்தை வணங்குகின்ற கொள்கை கொண்ட எவனால் தான் உலகில் யோக்கியனாக இருக்க முடியும்?ஆதனால் தானே கடவுள் பக்தர்களிடம் வேஷத்தைத் தவிர ஒழுக்கத்தையோ யோக்கியத்தையோ காண முடிவதில்லை. இப்பொழுது தெரிகிறதா மனிதன் ஏன் அயோக்கியனாய் இருக்கின்றான் என்பதற்குக் காரணம்?ஆகவே, கடவுள் மதம் ஜாதி ஆகியவை உலகில் இருக்கும் வரை எவரும் யோக்கியமாய் இருக்க முடியாது. மனிதனுக்கு ஆசை இயற்கை. அதோடு அதற்காக எது செய்தாலும் மன்னிப்பு உண்டு என்றால் என்ன ஆகும் என்பதை நீங்களே சிந்தித்தும் அனுபவத்தைக் கொண்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
(தந்தை பெரியார் 92-ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில்(17-09-1970) தந்தை பெரியார் எழுதிய கட்டுரை)

ஞாயிறு, 23 நவம்பர், 2008

ஸ்டெம் செல் சாதனை

ஸ்டெம் கலங்களில் இருந்து மனித இதயத்தின் பகுதியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கினர் . கடந்த ஆண்டு
உலக அளவில் முதல் முறையாக பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தண்டுகலங்கள் எனப்படும் ஸ்டெம் செல்களிலிருந்து மனித இதயத்தின் ஒரு பகுதியை வளர்த்து உருவாக்கியுள்ளார்கள்.இந்த முன்னேற்றத்தின் காரணமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுவது குறித்த சிக்கல்கள் குறையக்கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இந்தச் சோதனை விலங்குகளில் பரிசோதிக்கப்பட்டு, வெற்றி பெறுமேயாயின், இன்னமும் மூன்று வருடங்களில் செயற்கையாக வளர்க்கபட்ட மனித இதயத்தின் திசுக்கள், செயற்கை உறுப்புகள் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தபடக் கூடும் என இந்த ஆராய்ச்சியின் தலைவர் மக்டி யாகூப் பிரிட்டனின் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக செயற்கையாக ஒரு மனித இதயத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.பழுதடைந்த ஒரு திசுவை தண்டுக்கலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திசுக்களின் மூலம், மரபு ரீதியாக சேர்க்கப்படும் போது அதை உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.எனவே இனி வரும் காலங்களில் தானங்கள் மூலம் செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்க வேண்டிய நிலையால் ஏற்படும் பிரச்சினைகள் தடுக்கப்படக் கூடும்.

கொட்டு முரசே

எல்லார்க்கும் நல்லின்பம்எல்லார்க்கும் செல்வங்கள்எட்டும் விளைந்ததென்றுகொட்டு முரசே! -
வாழ்வில்கட்டுத் தொலைந்ததென்றுகொட்டு முரசே!இல்லாமை என்னும்பிணிஇல்லாமல் கல்விநலம்எல்லார்க்கும் என்றுசொல்லிக்கொட்டுமுரசே! -
வாழ்வில்பொல்லாங்கு தீர்ந்ததென்று கொட்டுமுரசே !
சான்றாண்மை இவ்வுலகில்தோன்றத் துளிர்த்ததமிழ் மூன்றும் செழித்ததென்றுகொட்டுமுரசே! - வாழ்வில்ஊன்றிய புகழ்சொல்லிக்கொட்டு முரசே!ஈன்று புறந்தருதல்தாயின் கடன்!
உழைத்தல்எல்லார்க்கும் கடனென்றுகொட்டுமுரசே! -
வாழ்வில்தேன்மழை பெய்ததென்றுகொட்டுமுரசே!
- பாவேந்தர் பாரதிதாசன் -

சனி, 22 நவம்பர், 2008

தோழர் பகத்சிங்க் கடைசி கடிதம்


தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள், சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது. கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார். தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.
தோழர்களே!
உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே. நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டோ, இருப்பதை விரும்பவில்லை.என்னுடைய பெயர். இந்தியப் புரட்சிக் கட்சி (இந்துஸ்தானி இன்கலாப் பார்ட்டி)யின் ஒரு சின்னமாகிவிட்டது. புரட்சிக்கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்.ஆனாலும் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருக்கும்.இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை. ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உங்கள் தோழன்,
பகத்சிங்.

பெண்களை அடிமைப்படுத்தவும் சாதிமுறைகளைக் காப்பாற்றவுமே மதச்சார்பு திருமண முறைகளை உண்டாக்கினர்!

பேரன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! மணமக்களே!
நாம் ஏன் இப்படிப்பட்ட திருமணங்களை நடத்துகின்றோம்? முன்னோர்கள் முறையினை விலக்குகிறோம் என்றால் நம் ஜாதி இழிவு ஒழிக்கவும், கடவுள் மதம் சாஸ்திரங்கள் பேரால் கற்பிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், பெண்ணடிமையினை நீக்கவும், ஆணுக்குப் பெண் அடிமை அல்ல, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை- நிலைநாட்டவுமே இத்தகைய திருமணமுறையைக் கையாளுகின்றோம். இவற்றிற்காகப் பாடுபட முன் வந்தவர்கள் நாங்கள் தான்.
திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது. இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ, பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும் மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள். இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள் நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம். இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம் மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன. மற்றப்படி நம் தமிழ்நாட்டில் நடைப்பெறும் திருமணச் சடங்குகள் எல்லாம் சாதியைப் பாதுகாக்க சாதிக்கு ஒருமுறையாக ஏற்பட்டுள்ளது. தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று ஆக்கி வைக்கப்பட்டவர்கள் வரவர மேல்சாதிக்காரர்களைப் பார்த்து இப்படிப்பட்ட அர்த்தமற்ற சடங்குகளை எல்லாம் கைக்கொள்ளவும் முற்படுகின்றனர்.
இம்மாதிரியான திருமணங்கள் நடைபெற நாங்கள் முயற்சி எடுத்துக் கொள்ளாமலும் சுயமரியாதையைப் பிரச்சாரங்கள் நடத்தப்படாலும் இருந்து இருக்குமானால் பெண்கள் மிகமிகக் கேவலமான நிலையிலேயே வைக்கப்பட்டு இருப்பார்கள்.பெண்களுடைய இழிநிலை அடிமைத் தன்மை இவற்றைப் போக்க இந்த நாட்டில் எந்த மகானோ, மகாத்மாவோ, அவதார புருஷர்களோ- கவலை எடுத்துக் கொள்ளவே இல்லை. மாறாக இவற்றை நிலைக்க வைக்கவே பாடுபட்டு வந்து இருக்கிறார்கள்.நமது புராணங்கள் எல்லாம் கூட நமது மடமையையும், இழிவையும் பாதுகாக்கவே ஏற்பட்டவையாகும். நம் கடவுளின் அவதாரங்கள் எல்லாம் மக்கள் அறிவு பெற்று விழிப்படையாமல் மடைமையிலும், இழிவிலும், ஆழ்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டனவாகும்.
இந்த நாட்டில் இந்தக் கடவுள் மதம் சாஸ்திரம் இவற்றை எல்லாம் எதிர்த்து ஒர் அளவு வெற்றி பெற்று இருக்கின்றது என்றால் எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கம் ஒன்றே தான்.எங்கள் இயக்கம் தோன்றிய பிறகு நாங்கள் சமூதாயத்தில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று கூறினோமோ, எங்கள் செங்கள்பட்டு மாநாடு போன்றவற்றில் என்ன தீர்மானங்கள் எல்லாம் போட்டோமோ, அவற்றில் பகுதிக்கு மேல் இன்று சட்டமாக்கி அமலிலும் இருக்கின்றதைக் காண்கிறோம்.
பலதார மணம் இன்று சட்ட விரோதம் செல்லுபடியாகாது.ஒர் ஆண் ஒரு பெண்ணுடன் தான் குடும்பம் நடத்த வேண்டும் என்று அமலில் இருப்பதைக் காண்கிறோம்.பெண்களுக்கு தகப்பன் சொத்தில் ஆண்களைப் போல பங்கு இன்று இருப்பதைக் காண்கிறோம்.பெண்களும் ஆண்களைப் போல அரசியல், உத்தியோகம், முதலியவற்றில் பங்கு பெற்று வருவதை நாம் இன்று காண்கிறோம்.
(07-06-1962- அன்று மேலவாளாடி திருமணத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. (விடுதலை – 09-06-1962)

வியாழன், 13 நவம்பர், 2008

இன்றைய அறிவியலின் நிலை

மக்களுக்கான பொது பயன் களுக்கத்தான்அறிவியல் கண்டுபிடிப்புகள் என்ற நிலை மாறி,கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் அறிவியலை தொழிலாக கடை பிடிப்பதில் ஏற்பட்டுள்ள இந்த போக்கு பணதிற்க்க்காகவும்,பலதிற்க்க்காகவும் தான் அறிவியல் என கருதப்படும் நிலை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.ஆம்இதன் காரணமாகத்தான் காலம் காலமாக அறிநர்களைகுறிக்க பயன் படுத்தப்பட்டு வந்த இயற்க்கை தத்துவ அறிந்ஞர் எனும் சொல்லை நீக்கி அறிவியல் அறிந்ஞர் எனும் சொல் உருவாக்க பட்டது. அறிவியல் கண்டுபிடிப்புகள் படைப்புகள் , கருவிகள் , எண்ணங்கள் , கருத்துக்கள் போன்றவை மக்களின் நலனுக்காக கட்டுப்பாடுகள் இன்றிஎளிதாக கிடைத்த காலங்கள் போய் அறிவு சொத்துகளாக மாறி விட்டன என்பது மிகவும் வருந்தத்தக்கது. இவற்றை காப்புறுதி செய்ய காப்புரிமை ஒப்பதங்களும் ஏற்பட்டுவிட்டன .உயிரினங்களும் தாவரங்களும் [மஞ்சள்] தனி மனித உரிமை பொருள்களாக மாறிவிட்டன . இது அறிவியல் தொழில் லகமயமாக்கப்பட்டு விட்டதன் விளைவே. எனவே வளர்ந்த நாடுகள் இச் சூழலை தமக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு வளர்ந்து வருகின்றன.

திங்கள், 10 நவம்பர், 2008

மனிதன் எதற்காக கடவுளை வணங்குகிறான்?


உலகில் மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும் கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது? ஏன் செய்ய வேண்டியதாகிறது? இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும். முதலாவதாக மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? தானாவே ஒவ்வொரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? அல்லது மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதை சிந்திக்க வேண்டும்.
உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத் தவிர அதுவும் மனிதரிலும் பல பேர்களைத் தவிர, மற்ற எந்த ஜீவராசிகளும் கோடிக்கணக்கான மனித ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவே இல்லை. மனிதரிலும் உலகில் பகுதிப்பட்ட மனிதருக்கும் கடவுள் நம்பிக்கை புகுத்தப் படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் கடவுள் நம்பிக்கை உள்ள எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. எப்படியெனில் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஒரே மாதிரியான, ஒரே பெயருள்ள, ஒரு மாதிரியான எண்ணிக்கைக் கொண்ட ஒரே மாதிரி உருவம் கொண்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல; ஒரே மாதிரியான கடவுள் தன்மை, ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களும் அல்ல. இதற்குக் காரணம் என்ன? கடவுள் நம்பிக்கையும் அதன் மேல் சொல்லப்பட்ட பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய் தானாகத் தோன்றாமல் மற்றவர்கள் கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும், தான் அனுசரிக்கும், தான் கட்டுப்பட்ட மதத்தாலும் மத ஆதாரங்களாலும், மதக் கற்பனை, மதக் கட்டுப்பாடு என்பவையாலுமே ஏற்படுவதால் இவை விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை.
மேற்கண்ட கருத்துகள் சாதாரணமாக கிருஸ்தவ மதக்காரனுக்கு ஒருவிதம். இஸ்லாம் மதக்காரனுக்கு ஒருவிதம், இந்து மதத்திலேயே சைவனுக்கு ஒருவிதம், வைஷ்ணவனுக்கு ஒருவிதம், சைவ, வைணவத்திற்குள்ளாகவே பல பிரிவுகள்; அப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதம். மற்றும் பல காரணங்களால் பலருக்கு பல மாதிரி நம்பிக்கை ஏற்படுகிறது.இவற்றிலும் "கீழ்நிலை'' அறிவில் இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், "மேல்நிலை'' அறிவில் இருப்பவர்களுக்கு ஒருவிதமாகவும், தோன்றப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் காரணம் வாய்ப்பு, கற்பிப்பு, சூழ்நிலை, தேவை (சுயநலம்) என்பதல்லாமல் வேறு எதைச் சொல்ல முடியும்?
கடவுளைப்பற்றி, கற்பித்தவர்கள் யாரானாலும், தாய் தந்தையார், குரு, சமயங்கள், நூல்கள் எதுவானாலும் கடவுளை வணங்கினால் நலம்பெறலாம் என்கின்ற ஒரு இலட்சியத்தை அடிப்படையாக வைத்தே புகுத்தி இருக்கிறார்கள் என்பதோடு, தாங்களும், மற்றவர்களுக்கு புகுத்தியோரும் கடவுளை நம்பினால், வழிபட்டால், பிரார்த்தித்தால் தங்களுக்கு வேண்டிய நலன்கள் கிடைக்கும். கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடனே இருக்கிறவர்களாவார்கள். மற்றும் தங்கள் தவறு மன்னிக்கப்படும். தங்கள் தகுதிக்குமேல் பலன் அடையலாம் என்பவையான எண்ணங்களே, ஆசைகளே, பேராசைகளே நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும், தொண்டிற்கும் காரணமாக இருக்கின்றன.
உண்மையான பொது உடைமை மதக்கார (கொள்கைக்காரன்)னுக்கும் சமதர்மக் கொள்கைக்காரனுக்கும் பவுத்தனுக்கும் பகுத்தறிவுவாதி (நாத்திகர்)களுக்கும் இந்த எண்ணங்கள் அதாவது சுயநலத்திற்காக கடவுளை நம்புதல், கடவுளை வணங்குதல், பிரார்த்தித்தல் முதலிய குணங்கள் தோன்றுவதில்லை என்பதோடு, தோன்றப் பட்டவர்களையும் முட்டாள்கள் என்றும் பேராசைக்காரர்கள், மற்ற மக்களை ஏய்ப்பவர்கள் என்றுமே கருதுகிறார்கள்! கடவுள் என்ற சொல்லும் கருத்தும் உண்மை அற்றதும், பொருளற்றதுமாய் இருப்பதால் அவற்றைப்பற்றி ஒரு பொருள் ஒரு தன்மை இல்லாமல் பல ஆயிரக்கணக்கான கருத்துகள் ஏற்பட்டுவிட்டன!
எந்த ஜீவனுக்கும் அதுவும் அறிவற்ற சிந்தனையற்ற எந்த ஜீவனுக்கும் தேவையில்லாத கடவுள், பகுத்தறிவுள்ள - சிந்தனையுள்ள - சுதந்திரமுள்ள தனக்கு வேண்டியதையும், தன்னையும் தேடி காப்பாற்றிக் கொள்ள தனது நல்வாழ்வை - வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள - தனக்கு வரும் கேடுகளைத் தவிர்த்துக்கொள்ள சக்தி உள்ள மனிதனுக்கு கடவுள், கடவுள் செயல், கடவுள் அருள் எதற்காகத் தேவை என்று கேட்கிறேன். கடவுளே அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினார் என்றால் கடவுள் மேற்கண்ட வசதி அற்ற மற்ற ஜீவராசிகளுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என்பதற்கு கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுள் அருள் தேடுகிறவர்கள் என்ன பதில் சமாதானம் சொல்ல முடியும்.
மேற்கண்ட கடவுள் தன்மைகள் எல்லாம் மனிதனுக்கு பாஷைகளைப்போல், நாடுகளைப்போல், மதங்களைப்போல் பிறந்த, வளர்ந்த, பழகின இடங்களுக்கு ஏற்ப ஏற்படும் தன்மையே தவிர இயற்கையானது, ஜீவ உரிமையானது என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல முடியாதே! தேசப்பற்று என்றும், மொழிப்பற்று என்றும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் முட்டாள்களும் கற்பித்துக் கொண்டு பலனடையப் பார்ப்பது எப்படியோ, அப்படியே சுயநலக்காரர்களும் முட்டாள்களும் கடவுள் அருள், கடவுள் பக்தி, கடவுள் பற்று, கடவுள் தன்மை, கடவுள்கள் எண்ணிக்கை, கடவுள்கள் உருவம் என்பனவற்றையெல்லாம் கற்பித்துக்கொண்டு மக்களை ஏய்க்கவும், மடையர்களாக்கவும், கங்கணம் கட்டிக் கொண்டு மனித சமுதாய வளர்ச்சியைப் பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் இவற்றில் எந்தவித உண்மையும், நாணயமும் இல்லை.
கடவுள் பணிக்காக பாதிரிகள், முல்லாக்கள், சங்கராச்சாரிகள், ஜீயர்கள், பண்டார சன்னதிகள், குருக்கள், பூசாரிகள் முதலிய இந்தக் கூட்டங்கள் மனிதனுக்கு எதற்காக தேவை? இவற்றால் இந்தக் கூட்டங்கள்தான் கவலையற்று, உழைப்பற்று சுகபோக வாழ்வு வாழ்கிறார்களே ஒழிய, இவர்களால் யாருக்கு, எந்த ஜீவனுக்கு என்ன பயன்? மற்றும் கடவுளை ஏற்படுத்தி, மதத்தை ஏற்படுத்தி, கடவுள் பெயரால் மதத்தின் பெயரால் பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி மக்களை இயற்கைக்கும் நேர்மைக்கும் சுதந்திரத்திற்கும் கேடாக நடக்கும்படி நடக்க வேண்டியதாய் பல கருத்துகளை கற்பனை செய்து மக்களை வஞ்சிக்கிறார்கள்.
உலகிலாகட்டும், நம் நாட்டிலாகட்டும் கடவுள், மதம், சாஸ்திரம், தர்மம் என்பவை கற்பிக்கப்பட்டிராவிட்டால் உலகில் ஏழை ஏது? பணக்காரன் ஏது? பாட்டாளி மகன் ஏது? (பிராமணன்) ஏது? பட்டினி கிடப்பவன் ஏது? வயிறு புடைக்க உண்டு புரளுபவன் ஏது? இவ்வளவு கொடுமைகளை - பேதங்களை சமுதாயத்தில் வைத்துக்கொண்டு பரிதாபம் பச்சாதாபம் இல்லாமல் முட்டாள்தனமாக - பித்தலாட்டத்தனமாக - மோசமாக ``கடவுளை நம்பு, கடவுளை வணங்கு, கடவுள் சொன்னபடி நட, உனக்கு தரித்திரம் நீங்கும்'' என்றால், இப்படிப்பட்ட இவர்கள் அறிவும் பரிதாபமும் கொண்ட மனித ஜீவன் ஆவார்களா?
ஆகவே, கடவுள் என்பதும், பிரார்த்தனை என்பதும், கடவுள் அருள் என்பதும் கைதேர்ந்த பித்தலாட்டக்காரர்களின் மோசடி, தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.நாம் சமதர்மம் அடைய ஆசைப்பட்டு இறங்கிவிட்டோம். இனி இப்புரட்டுக்கும் முட்டாள்தனத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது என வேண்டிக் கொள்ளுகிறேன்.
(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் -'விடுதலை'-07.10.1968. )

ஞாயிறு, 9 நவம்பர், 2008

மனிதம்



நம் மக்கள் வாழ மனித நேயம் வாழ

நம் இனம் வாழ நம் மொழி வாழ

குரல் கொடுப்போம் எம் உறவுகளே !

நம் உறவுகளுக்காய்!

தீயில் கருக்கபடும் நம் இளம் தளிர்களுக்காய்,

மானம் கெடுக்கப்படும் நம் பெண்களுக்காய் ,

வாழ வழியில்லாது திசை மாறி திரியும்

நம் சொந்தங்களுக்காய் ,

குரல் கொடுப்போம் எம் உறவுகளே !

நம் உறவுகளுக்காய் !

ஓங்கி உரத்த குரல் கொடுப்போம் !

ஒருமித்த குரல் கொடுப்போம் !

நமக்கு தீங்கிழைக்க அச்சமுற வேண்டும் அவர்கள் இனி ,

நம் குரல் கேட்டே

ஆகவே ,

இதனைஎனும் செய்வோம் நாம்

நம் மக்கள் வாழ மனிதநேயம் வாழ

நம் இனம் வாழ

நம் மொழி வாழ குரல் கொடுப்போம்

எம் உறவுகளே

நம் உறவுகளுக்காய் !
-தமிழ் -

வெள்ளி, 7 நவம்பர், 2008


புதன், 5 நவம்பர், 2008

பெண்ணின் கேள்வி?

சீதையின் கற்பு குறித்தும், அவள் வயிற்றில் வளரும் கருவைக் குறித்தும், ஊரில் யாரோ ஏதோ பேசினார்கள் என்றும், அதனால் குடிமக்களின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டுவது மன்னனின் கடமை என்றும் கூறி இராமன் என்னைக் காட்டிற்கு அனுப்பினானே! உண்மையிலேயே இவன் குடிமக்களின் குரலுக்கு- சொல்லுக்கு மதிப்பளிப்பவன் என்றால் அன்று கைகேயி இட்ட கட்டளைக்கு ஏற்ப காட்டிற்குச் செல்லும் போது, அயோத்தி மாநகர மக்களே இராமா! நீதான் எங்கள் மன்னன். எங்களைப் பாதுகாக்க நீதான் வேண்டும். காட்டிற்குச் செல்லாதே என்று, மன்றாடியபடி பின் தொடர்ந்தார்களே! குடிமக்களின் கருத்தை இன்றைக்கு மதிப்பதாகக் கூறும் இராமன் அன்றைக்கு ஏன் புறக்கணித்தான்? என வினவுவாள்.

nam


தோழர்களே
உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநீதியை கண்டு கோபம் கொண்டால் நீங்களும் என் தோழரே!
Dr. சேகுவாரா