வியாழன், 27 ஆகஸ்ட், 2009

ஒரு கவிதை

அண்மையில் படித்தது .... பாகிஸ்தான் கவிஞர் பெய்ஸ் அஹமட் பெய்ஸ்இன் ஒரு கவிதையை ...........
பேசு ...
உனது நாக்கு இப்போதும் உன்னுடையதே
பேசு ...
உனது வாழ்க்கை இப்போதும் உன்னுடையதே
உலைக் களத்தின் உள்ளே பார்
எழுந்தாடும் தீயின் நாக்கு ,
உடல் அழிந்து போகும் முன்
நாக்கு மரத்து போகும் முன்
இருக்கும் நேரம் குறைவு ,
பேசு ...
உண்மை இப்போதும் உயிருடன் தான்
உள்ளது
சொல் ...
நீ சொல்ல வேண்டியதை சொல் ............