கொலையுண்டு போனஎன் புதல்வர்களின்முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்திதன் கோரப்பசியாற்றிதாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்இன்னுமா "தாய் நிலம்"புதல்வர்களைக் கேட்கிறது?போராட என்னை அழைக்காதேநானொரு தாய்எனது புதல்வர்களையும் கேட்காதேஇரக்கமற்ற 'தாய்நிலமே'கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்இன்னமும் காயவில்லை.கடித்துக் குதறிநெரித்தும் எரித்தும்வடக்கிலும் தெற்கிலும்உலகெங்கிலுமாகஎத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.இன்னும் அடங்காதோ உன் பசி?விண்ணேறி மண் தொட்டுமீண்ட பின்னும்சமாதானம் வேண்டயுத்தம் தேவையோ?பற்றி எரிக ஆயுத கலாசாரம்!என் மழலைகளை விடுநாளைய உலகம்அவர்களுக்காய் மலரட்டும்!
(ஈழக்கவிஞர் ஒளவை)மகன் புறமுதுகிட்டான் போர்க்களத்தில் என்று கேட்டு அவன் பாலுண்ட தன் முலையை அறுத்து எறிந்த புறநானூற்று தாயின் வீரத்தைச் சொல்லி சொல்லி ஆணுலகம் போர்ப் பரணி எழுதி வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் மூளைச்சலவையிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இன்றைய போர்முனையில் இலங்கையிலிருந்து ஒலிக்கிறது ஒரு தாயின் குரல்...........